அத்வைதமும் அரசாங்கமும்

வர்ணதர்மம் தேச ஒற்றுமையைக் குலைத்தது என்கிற புரளி மாதிரி இன்னொன்று சொல்வதையும் கொஞ்சம் உடைத்து விடுகிறேன். ‘மாயை மாயை என்று லோகத்தை ஆசார்யாள் சொன்னதால் ஹிந்துக்கள் கார்ய ஸாஹஸமேயில்லாமல் த்ராபையாக ஆகிவிட்டார்கள். அதனால்தான் இந்தியா வெளிதேசத்தவர்களுக்கு அடிமைப்பட்டது’ என்று சொல்கிறார்கள். அத்வைதத்தையோ, மாயையையோ ஆசார்யாள் ஸர்வஜனங்களும் ஏற்று நடத்தவேண்டிய தத்வங்களாகச் சொல்லவேயில்லை. அவர்களைக் கர்மாநுஷ்டானத்திலும் பக்தி வழிபாட்டிலும்தான் அவர் கொண்டு வந்தார். பக்வப்பட்டபின்தான் அத்வைதத்துக்கும், ‘மாயா டாக்ட்ரின்’ என்கிறார்களே அதற்கும் போகச் சொன்னார்.

சரித்ர பூர்வமாக ப்ரத்யஸத்தில் தெரிவதை எடுத்துக்காட்டினால் போதும், பரம அத்வைதிகளாக இருந்த மூன்று பேர்தான் – மூவரும் ப்ராமணர்களே – மூன்று ஆக்கசக்தி பொருந்திய ஹிந்து ஸாம்ராஜ்யங்களை ஸ்தாபிக்கக் காரணமாக இருந்தவர்கள். அந்த மூன்று பேரில் ஒருவர் ப்ரம்மசாரி, இன்னொருவர் க்ருஹஸ்தர், மூன்றாமவர் ஸந்நியாஸி என்பது ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம்.

மாலிக் காஃபூர் தெற்கே ராமேச்வரம் வரையில் போய் ஆலயங்களைச் சின்னாபின்னப்படுத்தி ஹிந்து ஸமூஹத்தின் மீது ரணகாயம் ஏற்படுத்திவிட்டுப் போனபின் மறுபடி நம்முடைய நாகரிகம் தலைதூக்கிப் பெருமைக்குரிய ஸ்தானத்தைப் பெற்றது விஜயநகர ஸாம்ராஜ்யத்தினால்தான். அதைப் பதிநாலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்தாபித்துக் கொடுத்தது யாரென்றால் அத்வைத ஸந்நியாசியாக ஆசார்ய பீடத்திலேயே இருந்த வித்யாரண்ய ஸ்வாமிகள்தான்.

விஜயநகர ஸாம்ராஜ்யத்திலிருந்தே கிளை மாதிரி தஞ்சாவூர் நாயக் வம்ச ராஜ்யத்தை ஸ்தாபிக்கக் காரணமாயிருந்தவர் க்ருஹஸ்தராயிருந்தாலும் ‘அத்வைத வித்யாசார்ய’ரென்றே கூறப்பட்ட கோவிந்த தீக்ஷிதராவார்.

அவுரங்கசீபின் மதவெறியில் ஹிந்து ஸமுதாயம் நசித்துப்போகாமல் அதற்குப் புது ஜீவன் ஊட்டி மஹாராஷ்ட்ர ஸாம்ராஜ்யம் ஏற்படுத்தியது சிவாஜி என்றால், அந்த சிவாஜிக்கு ஜீவசக்தி ஊட்டித் தட்டி எழுப்பியது அவனுடைய குருவும், பரம அத்வைதியும், சுத்த ப்ரஹ்மசாரியுமான ஸமர்த்த ராமதாஸ்தான்.

நிரம்பவும் விஷயம் தெரிந்தமாதிரி காட்டிக்கொண்டு பொறுப்பில்லாமல் அபிப்ராயம் சொல்லி நம்முடைய பெரிய ஆத்மிக, ஸமய கலாசாரத்தில் நமக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படிச் செய்கிறார்களென்று காட்டவே இதையெல்லாம் சொல்கிறேன்.

ஜனங்களின் மதிப்பிலே யாருக்கு உயர்ந்த ஸ்தானம், வித்தையில் யார் ஓங்கி இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து ஹிந்து ஸமுதாயப் பிரிவுகளுக்குள்ளே போட்டி பொறாமைகள் இருந்ததேயில்லை. அப்படிக் கொஞ்சம் எங்கேயாவது தலைதூக்கினால்கூட அது க்ஷத்ரியர்களுக்கு ப்ராமணர்களிடம் ஏற்பட்டதாகத்தானிருந்தது.

If you see any errors in the text, please leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s